Feb 20, 2019 08:47 AM

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களுக்கு நடிகர் அம்சவர்தன் நிதி உதவி!

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களுக்கு நடிகர் அம்சவர்தன் நிதி உதவி!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பல வகையில் உதவி செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தை இரண்டு வீரர்களும் அடங்குவர். இவர்களது குடும்பத்திற்கு நடிகர் அம்சவர்தன் நிதி உதவி வழங்கியுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியம் மற்றும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையும் பழூர் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவ்சந்திரன் ஆகிய வீரர்களது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் அம்சவர்தன், அவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

 

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான நடிகர் அம்சவர்தன், தற்போது ‘பீட்ரூ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர், ஏழை எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.