Oct 03, 2019 05:19 AM

ஹன்சிகாவை கதறவிட்ட தொழிலதிபர்!

ஹன்சிகாவை கதறவிட்ட தொழிலதிபர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா, ’மகா’ மற்றும் தலைப்பு வைக்கப்படாத ஹீரோயின் சப்ஜக்ட் என இரண்டு தமிழ்ப் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற கவலையோடு இருக்கும் ஹன்சிகா, தொழிலதிபர் ஒருவருடன் சேர்த்து வெளியான செய்தியால் கறியிருக்கிறார்.

 

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருள், விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் உலா வருகிறது. இது உண்மை தான் என்றாலும், அவருடன் நடிக்க இதுவரை எந்த ஹீரோயினும் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

முதலில் நயன்தாராவை அனுகியதாகவும் அவர் மறுத்ததால் தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது ஹன்சிகா அண்ணாச்சியுடன் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தினசரி நாளிதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

இந்த செய்தியை அறிந்த ஹன்சிகா கதறியிருப்பதோடு, இதற்கு உடனடியாக மறுப்பும் தெரிவித்திருப்பவர், இனி இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். எனது புதிய படம் குறித்த அறிவிப்பை நானோ அல்லது அந்த படத்தின் தயாரிப்பு தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை, நீங்களாக எந்த கற்பனை கதையையும் எழுதாதீர்கள், என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.