சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகும் ‘ஹனு-மேன்’ பட டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜா நடிப்பில் சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகும் திரைப்படம் ‘ஹனு-மேன்’. ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கே.நிரஞ்சன் ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செடவில் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.
தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அமிர்தா ஐயர் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.