Jan 18, 2020 04:05 AM

ஜெயஸ்ரீ தற்கொலைக்கு இவர் தான் காரணம்! - தோழி வெளியிட்ட தகவல்

ஜெயஸ்ரீ தற்கொலைக்கு இவர் தான் காரணம்! - தோழி வெளியிட்ட தகவல்

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, தனது கணவரான நடிகர் ஈஸ்வருக்கும், நடிகை மகாலக்‌ஷ்மிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஈஸ்வர், புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

 

சிறையில் இருந்து வெளியே வந்த ஈஸ்வர், ஜெயஸ்ரீ மீது பல புகார்கள் கூற, பதிலுக்கு ஜெயஸ்ரீ ஈஸ்வர் குறித்து தல திடுக்கிடும் புகார்களை முன் வைத்தார். அதே சமயம், நடிகை மகாலக்‌ஷ்மியும் சில ஊடங்களுக்கு இது தொடர்பாக பேட்டியளித்தார். பிறகு மகாலக்‌ஷ்மியின் கணவர், தான் மகாலக்‌ஷ்மியும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன், ஆனால், அவர் தான் விவாகரத்து கேட்கிறார், என்று கூறினார்.

 

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், ஜெயஸ்ரீ தற்கொலைக்கு ஈஸ்வர் தான் காரணம் என்று அவரது தோழி கூறியிருக்கிறார். ஈஸ்வர் தொடர்ந்து ஜெயஸ்ரீ-யிம் விவாகரத்து கேட்டு தொல்லை கொடுத்து வருவதோடு, அவரை நிம்மதியாக வழா விடாதபடி பல தரப்பில் இருந்தும் அவருக்கு தொல்லைக் கொடுத்து வருகிறாராம்.

 

அவர் எங்கயாவது காரில் சென்றால், வழியில் அவரை மடக்கி, ”இந்த காரை யார் உன்னை பயன்படுத்த சொன்னது” என்று கேட்கிறார்களாம். அதே போல், சிலர் அவருக்கு போன் செய்து அசிங்கமாக பேசுவதோடு, ஈஸ்வரை விட்டு விலகி செல், என்றும் மிரட்டுகிறார்களாம்.

 

இப்படி தொடர்ந்து, பல தரப்பில் இருந்து ஜெயஸ்ரீக்கு தொடர் தொல்லைகள் கொடுத்ததால் தான் அவர் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாராம். தற்கொலைக்கு முன்னதாக, தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், என்றும் அவர் தனது தோழியிடம் கூறி அழுததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.