பிக் பாஸில் புதிதாக எண்ட்ரியாக உள்ள போட்டியாளர் இவர் தானாம்!

பிக் பாஸ் சீசன் 3 கடந்த மாதம் தொடங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஞாயிறு எந்த போட்டியாளர் எலிமினேட் ஆவார், என்பதை தெரிந்துக் கொள்ள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
அதே சமயம், பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 17 பேர் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 16 பேர் மட்டுமே போட்டியாளர்களாக உள்ளார்கள். மீதமுள்ள அந்த ஒருவர், வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரிக்கொடுக்க இருக்கிறார். அவர் யார்? என்று தெரிந்துக் கொள்வதில் ரசிகர்கள் பேரார்வத்தில் இருக்கிறார்கள்.
முதலில் சீரியல் நடிகை ஆல்யா மானசா தான் அந்த போட்டியாளர் என்று கூறப்பட்டது. தற்போது நடிகை கயல் ஆனந்தி தான் அவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான கயல் ஆனந்தி, வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஒரு சில பட வாய்ப்புகளை பெற்றிருக்கும் அவர், பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக விரைவில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.