Jul 31, 2019 03:07 PM

பிக் பாஸ் போட்டியில் இவர் தான் வெற்றி பெறுவாராம்! - பிரபலத்தின் கணிப்பு

பிக் பாஸ் போட்டியில் இவர் தான் வெற்றி பெறுவாராம்! - பிரபலத்தின் கணிப்பு

பிக் பாஸ் சீசன் 3 யில் இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியேறப் போகும் ஐந்தாவது போட்டியாளர் யார்? என்பதை தெரிந்துக் கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். 

 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3 யின் டைடில் வின்னராக வரப்போவது யார்? என்பது குறித்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் கூறியுள்ளார்.

 

வனிதாவுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்திய மீரா மிதுனை பிடிக்காதவர்கள் பலர் இருந்தாலும், அவர் செய்வதை ஏற்றுக்கொண்டு ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வெளியேற்றப்பட்டது அந்த கூட்டத்திற்கு பேரதிர்ச்சியாகவும் அமைந்தது.

 

Meera Mithun

 

தற்போது ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் மீரா மிதுன், பிக் பாஸ் 3 யின் டைடிலை சாண்டி தான் வெல்வார் என்று கூறியிருக்கிறார். அதே சமயம், தர்ஷனுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, ஆனால் அவருக்கு எது சரி, எது தவறு என புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால், அவர் பட்டத்தை வெல்வது கடினம் தான், என்று தெரிவித்திருக்கிறார்.