Aug 25, 2019 12:29 PM

கோலிவுட்டில் நடந்த ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா!

கோலிவுட்டில் நடந்த ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரது படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்படும் நிலையில், ஹாலிவுட் படத்தின் இசை வெளியீட்டு விழா நம்ம கோலிவுட்டில் நடத்தப்பட்டது.

 

அமெரிக்கவாழ் இந்தியரான டெல் கே.கணேசன், கய்பா பிலிஸ் (Kyyba Films) சார்பில் ’கிரிஸ்துமஸ் கூப்பன்’ (Christmas Coupon) மற்றும் ‘டெவில்ஸ் நைட்’ (Devil's Night) ஆகிய ஹாலிவுட் படங்களை தயாரிக்கிறார். இந்த இரண்டு படங்களில் நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இதில், ’கிரிஸ்துமஸ் கூப்பன்’ (Christmas Coupon) படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் வெளியிட்ட டெல்.கே.கணேசன், ‘டெவில்ஸ் நைட்’ (Devil's Night) படத்தில் மோசன் பிக்சர் மற்றும் ஆடியோவையும் சென்னையில் வெளியிட்டுள்ளார்.

 

இதற்கான நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், அவரது மனைவி பாடகி சைந்தவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படத்திற்கான சிறப்பு டி-ஷர்ட், மோசன் போஸ்டர் மற்றும் ஆடியோ குறுந்தகடை வெளியிட்டனர். இவர்களுடன் ‘டெவில்ஸ் நைட்’ (Devil's Night) படத்தில் நடித்திருக்கும் பிரபல ஹாலிவுட் மாடல் ஷலினா குஷ்மானோ (Shalina Gusmano), படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் டி.கணேசன், பிரபல ஹாலிவுட் ராப் பாடகர் ஸ்விட்டி மெக்வேய் (Swifty Mcvay) ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

Devil Nigh Movie

 

ஹாரர், பேண்டஸி, த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் நைட்’ (Devil's Night) படத்தை சாம் லோகன் கலெகி (Sam Logan Khaleghi) இயக்கியிருக்கிறார். கைபா பிலிம்ஸ் சார்பில் டெல்.கே.கணேசன், ஜி.பி.திமோதியோஸ் (G.B.Thimotheose) ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.