சிம்புவுடன் மீண்டும் இணைந்துவிட்டேன்! - முன்னாள் காதலியின் அறிவிப்பு

நடிகர் சிம்பு வாழ்க்கையில் பல காதல்கள் இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. நயந்தாராவுடன் காதல் வயப்பட்டவர் பிறகு அவரை பிரிந்ததும், ஹன்சிகாவை காதலிக்க தொடங்கினார். சிம்பு - ஹன்சிகா காதல் திருமணத்தில் தான் முடியும் என்று கூறப்பட்டது.
அதேபோல், ஹன்சிகா தனது தாயாருடன் சிம்பு வீட்டுக்கு சென்று திருமண பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால், அந்த காதலும் பிரிவில் தான் முடிந்தது. சிம்பு, ஹன்சிகா இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்ட சிம்பு, இனி என் காதல் ஆன்மீகம் தன என்று கூறி வந்தார்.
இதற்கிடையே, நயந்தாராவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சேர்ந்து சிம்பு நடித்ததன் மூலம் அவர் நயந்தாராவுடன் மீண்டும் இணைந்துவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில், நயந்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், சிம்பு ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தில் சிறப்பு வேடம் ஒன்றில் நடிப்பதாக தகவல் வெளியானது.
தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள அன்சிகா, சிம்புவுடன் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நான் சிம்புவுடன் மீண்டும் இணைந்துவிட்டேன், என்று கூறியிருக்கிறார்.