இளையராஜாவின் அதிரடி அறிவிப்பு! - அதிர்ந்துபோன இசையுலகம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் ‘இசை கொண்டாடும் இசை’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பங்கேற்று பாடுவதாக அறிவிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், திரை இசை கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.பி.பாலசுப்ரமணியமும், இளையராஜாவும் ஒரே மேடையில் பாட்டு பாடி மக்களை மகிழ்வித்தார்கள். இவர்களுடன் ஏசுதாஸ், மனோ, பாம்பே ஜெயஸ்ரீ, உஷா உதுப், பவதாரணி, மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கமலஹாசன், விவேக், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா,
ஸ்வேதா, சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, இசைக் கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டடத்தை தனது சொந்த செலவில் கட்டு தருவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பால் சந்தோஷமடைந்த இசை உடலகம் சற்று அதிர்ந்தும் போனது.