Jul 12, 2019 12:48 PM

சசிகுமார், சரத்குமார் இணையும் படத்தின் முக்கிய ரகசியம் இது தான்!

சசிகுமார், சரத்குமார் இணையும் படத்தின் முக்கிய ரகசியம் இது தான்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெற்றிப் பெற்ற ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் முதல் முறையாக இணையும் படத்திற்கு ‘நா நா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

படத்தின் தலைப்புக்கான அர்த்தம் குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, “அதுதான் படத்தின் முக்கிய ரகசியம். படத்தை பார்க்கும் போது இந்த தலைப்பு மிக சரியான ஒன்று தான் என்று ரசிகர்கள் உணர்வார்கள்” என்று கூறினார்.

 

Naa Naa

 

அதே சமயம், ஹீரோ சசிகுமாரின் வேடத்திற்கு இணையான ஒரு வேடமாக சரத்குமாரிடம் வேடம் இருப்பதோடு கதையை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரமாகவும் இருக்குமாம்.

 

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.