Mar 08, 2020 07:00 AM

நயன்தாராவை மடக்கிய வருமான வரித்துறை! - வைரலாகும் புகைப்படம் இதோ

நயன்தாராவை மடக்கிய வருமான வரித்துறை! - வைரலாகும் புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார். ஒரு படத்திற்கு சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தையே இரண்டு மடங்காக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதோடு, முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அதிகமாக சம்பளம் வாங்குவதோடு, சில நிபந்தனைகளையும் போடுகிறாராம். அதில் முக்கியமான நிபந்தனை, படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு நிகழ்வு என்று எந்த புரோமோஷன் நிகழ்வுகளிலும் தான் பங்கேற்க மாட்டேன், என்பது தான். அவரது இந்த நிபந்தனைக்கு ஓகே என்றால் தான், அவர் நடிக்க சொல்கிறாராம்.

 

பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும், அந்த படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டாதா நயன்தாராவை வருமான வரித்துறையினர் மடக்கியுள்ளனர். ஆம், வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.

 

Actress Nayanthara

 

உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், வருமான வரித்துறையின் அங்கமான ஐ.ஆர்.எஸ் அமைப்பு சார்பில் இன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

 

எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நயன்தாரா, வருமான வரித்துறை நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் என்றால், அந்த துறையின் மீது இருக்கும் பயம் தான் காரணம், என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். 

 

கோடி கோடியாய் நயன்தாராவுக்கு கொட்டிக் கொடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்ய முடியாததை, வருமான வரித்துறையினர் சுலபமாக செய்துவிட்டார்கள்.