Oct 24, 2019 03:38 AM
85 வயது தாத்தா வேடத்தில் கமல்! - கசிந்தது ‘இந்தியன் 2’ பட புகைப்படங்கள்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான ‘இந்தியன்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றப் படமாகும். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
தற்போது போபாலில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.40 கோடி செலவிட பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் 85 வயது தாத்தா வேடத்தில் நடிக்கிறாராம். அவர் அந்த கெட்டப்புடன் சண்டைப்போடும் காட்சி தான் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
போபாலில் நடைபெற்ற இப்படப்பிடிப்பின் போது சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,