Aug 23, 2019 04:37 AM

’இந்தியன் 2’ படத்தில் மீண்டும் சிக்கல்! - முன்னணி நடிகை விலகல்

’இந்தியன் 2’ படத்தில் மீண்டும் சிக்கல்! - முன்னணி நடிகை விலகல்

கமல்ஹாசன் நடிப்பி, ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன் 2’ என்ற தலைப்பில் உருவாகிறது. ஆரம்பத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இதில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்க, சித்தார்த், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, நெடுமுடி வேணு, விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் இன்னும் இரண்டு தினங்களில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேதி காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Aishwarya Rajesh

 

‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் இயக்குநர் ஷங்கர் மொத்தமாக பல மாத கால்ஷீட் கேட்டு வருவதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதே பிரச்சினையால் தான் ஆர்.ஜே.பாலாஜியும் ‘இந்தியன் 2’ வில் நடிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது, அதே தேதி பிரச்சினையால் தான் ஐஸ்வர்யா ராஜேஷும் படத்தில் இருந்து விலகியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘மெய்’ படம் இன்று வெளியாகிறது. மேலும், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ’கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’, ’க.பெ.ரணசிங்கம்’, ’வானம் கொட்டட்டும்’, ’கருப்பர் நகரம்’ ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.