May 30, 2019 06:54 AM
நடிகையை காதலிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் கூட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த நிலையில், மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகும் பிரபல பாலிவுட் நடிகை சோனல் சவுகான் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருகிறார்களாம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சோனல் சவுகான், ”எங்களை ஒருவருக்கொருவர் தெரியும், எங்கள் துறையில் நுழையும் முன்பே இருவருக்கும் பழக்கம் இருந்தது. ஒன்றாக டின்னருக்கு செல்வோம். ஆனால், காதலிப்பதாக வரும் செய்தி உண்மையில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இது பற்றி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.