விஜயின் மேனேஜர் வெளியிட்ட தகவல்? - பரபரப்பில் கோலிவுட்

விஜயின் 64 வது படத்திற்கு ‘மாஸ்டர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து ரசிகர்கள் அதை பல வகையில் கொண்டாடி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் விஜய் சம்மந்தமாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விஜயின் 65 வது படத்தின் தகவல் ஒன்று வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இந்த தகவலை விஜயின் மேனேஜரான ஜெகதீஷ் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜயின் 65 வது படத்தை ஷங்கர் இயக்கப் போவதும், அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதும் தான் அந்த தகவல். இந்த தகவலால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதற்கு காரனம், விஜயின் மேனேஜர் ஜெகதீஷ், இந்த தகவலை உறுதிப்படுத்தியதாக வெளியான மற்றொரு தகவல் தான்.
அதே சமயம், இந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை, இது வெறும் வதந்தி என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டதாக புதிய தகவல் ஒன்றும் பரவி வருகிறது.
மொத்தத்தில், எந்த தகவல் உண்மை, எந்த தகவல் வதந்தி என்பது விஜய் தரப்பில் கூறினால் மட்டுமே தெரிய வரும்.