Aug 10, 2019 05:37 AM

ஜோதிகாவை தொடர்ந்து மீண்டும் ஹீரோயினுடன் கைகோர்க்கும் கல்யாண்!

ஜோதிகாவை தொடர்ந்து மீண்டும் ஹீரோயினுடன் கைகோர்க்கும் கல்யாண்!

பிரபுதேவாவை வைத்து ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண், அதே பார்மட்டில் ஜோதிகாவை வைத்து ‘ஜாக்பாட்’ படத்தை இயக்கினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், தனது அடுத்தப் படத்திற்கு தயாராகியிருக்கும் இயக்குநர் கல்யாண், இந்த முறையும் ஹீரோயின் ஒருவருடன் கைகோர்த்திருக்கிறார்.

 

ஆம், இயக்குநர் கல்யாண் தனது அடுத்தப் படத்தையும் ஹீரோயின் சப்ஜக்ட்டாகவே இயக்க உள்ளார். இதில் கதையின் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். காமெடி பிளஸ் ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மன்சூர் அலிகான் என கல்யாணின் கம்பெனி நடிகர்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள்.

 

Hansika

 

தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் கல்யாண், இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.