Aug 01, 2018 04:26 AM

ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளான விஜய்! - காரணம் சொன்ன பிரபல நடிகர்

ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளான விஜய்! - காரணம் சொன்ன பிரபல நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். நடிப்பு மட்டும் இன்றி சமூக விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர், தனது படங்களிலும் சமூக கருத்துக்களை பேசி வருகிறார்.

 

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் அரசியல், விவசாயம் என சமூகத்திற்கு தேவையான பல விஷ்யங்கள் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், விஜய் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், சினிமாவை ஆழ்வது போல அவர் தமிழ்நாட்டையும் ஆல்வார் என்றும் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

 

Radha Ravi and Vijay

 

‘சர்கார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வரும் ராதாரவி, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசுகையில், “விஜய் இன்னும் 5 வருடங்களில் அரசியலுக்கு வர வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதே தைரியமாக பல விஷயங்களை செய்தவர் விஜய். அதனால் தான் அவரிடம் எதிர்ப்பை சம்பாதித்தார். 

 

நீங்கள் புரட்சித்தலைவரை போல நிச்சயமாக வருவீர்கள். அதற்காக அவரிடம் இருக்கும் சில குணங்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். திரையுலகை ஆள்வது போல தமிழ்நாட்டையும் விஜய் ஆழ்வார்.” என்று தெரிவித்தார்.