Jul 30, 2019 03:15 PM

கதை திருட்டு வழக்கில் சிக்கிய ஜெயம் ரவி படம்! - காத்திருக்கும் நீதிமன்ற தடை

கதை திருட்டு வழக்கில் சிக்கிய ஜெயம் ரவி படம்! - காத்திருக்கும் நீதிமன்ற தடை

’போகன்’, ‘வனமகன்’, ‘டிக் டிக் டிக்’ என தொடர் தோல்விப் படங்களை கொடுத்து வரும் ஜெயம் ரவி, வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கோமாளி’ யை தான் பெரிதும் நம்பியிருக்கிறார். காரணம், இதில் 7 க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம்.

 

இப்படத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இப்படத்திற்கு நீதிமன்றம் தடை காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம், கதை திருட்டில் இந்த ‘கோமாளி’ குழு வசமாக சிக்கியுள்ளதாம்.

 

நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவரது கதை தானாம் இது. இந்த கதையை கடந்த 2014 ஆம் ஆண்டு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த கிருஷ்ணமூர்த்தி, பார்த்திபனை ஹீரோவாக வைத்து இப்படத்தை எடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால், பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை அவர் சொல்லியிருக்கிறார். மேலும், கிருஷ்ணமூர்த்தியின் இந்த கதை குறித்து கோடம்பாக்கத்தில் பலருக்கும் தெரிந்திருக்கிறது.

 

தற்போது ‘கோமாளி’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த கதையும், கிருஷ்ணமூர்த்தியின் கதையும் ஜெராக்ஸ் எடுத்தது போல அப்படியே இருப்பதை கண்டுபிடித்து, இது தொடர்பாக எழுத்தாளர் சங்கத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தியின் புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ள எழுத்தாளர் சங்கம், ‘கோமாளி’ படத்தின் ரிலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Comali

 

ஆக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி ‘கோமாளி’ படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதால், ஜெயம் ரவியின் நம்பிக்கை நாஷமாக போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.