நாயகிகளின் உதடுகளுக்கு குறி வைக்கும் ஜீவா!

‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவா, தற்போது ‘கொம்பு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ‘தமிழ்ப் படம்’ படத்தில் நடித்த திஷா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஷ்மிதா ஆகியோர் நடிக்கின்றனர்.
ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா நிறுவனம் சார்பில் எம்.பன்னீர் செல்வம், பி.வானதி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை ஈ.இப்ராஹிம் இயக்குகிறார்.
திகில் பிளஸ் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் காதல் காட்சிகளும் சற்று தூக்கலாகவே இருக்கும், என்பதை தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் புகைப்படங்கள் தெளிவுப்படுத்தியுள்ளது. காமெடி நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஜீவா, ஹீரோவாக எண்ட்ரிக்கொடுத்ததும் ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார்.
முதல் படத்திலேயே ஹீரோயினுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர், ‘கொம்பு’ படத்தில் இடம்பெறும் ஒரு ரொமான்ஸ் பாடலில், ஹீரோயின் திஷா பாண்டேவின் உதட்டையும் பதம் பார்த்திருக்கிறார்.
மழையில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடல் காட்சியில், ரொமான்ஸ் விஷயத்தில் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள பல ஹீரோக்களையே மிஞ்சும் அளவுக்கு ஜீவா, காதல் ரசம் சொட்ட சொட்ட நடித்திருப்பதோடு, ஹீரோயினின் உதட்டை பிச்சு எடுத்து விடுவாரோ, என்று எண்ண தோன்றும் அளவுக்கு பட்டையை கிளப்பியிருக்கிறார்.
பிற திகில் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் ஈ.இப்ராஹிம், இப்படத்தின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறாராம்.