Jul 05, 2019 06:52 AM
கோலிவுட்டை கலக்க வரும் அறிமுக ஹீரோயின் ஜெசிகா பவ்லின்!

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகியப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பரிட்சையமானவர் ஜெசிகா பவ்லின்.
அழகில் மட்டும் நிறைவு இல்லாமல் நடிப்பிலும் நிறைவுக் காட்டும் ஜெசிகா பவ்லின், சுசீந்திரன் இயக்கும் ‘ஏஞ்சலினா’ படத்தில் சூரியின் தங்கையாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்திருப்பவர், தமிழில் ‘ஏகாலி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அப்படத்தை தொடர்ந்து இனி அதிகப் படங்களில் கதாநாயகியாக ஜெசிகா வலம் வருவது உறுதி. காரணம், ‘ஏகாலி’ படமும், அதில் ஜெசிகாவின் நடிப்பும் கோலிவுட்டை அவர் ஒரு ரவுண்ட் வருவார் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளதாம்.