கோலிவுட்டில் ஒரு ‘ஜிமிக்கி கம்மல்...’ டான்ஸ்! - இது ஜோதிகா வெர்சன்

“ஜிமிக்கி கம்மல்...” என்ற மலையாளப் பாடலும், அந்த பாடலுக்கு சில மலையாள கல்லுரி பெண்கள் ஆடிய நடனமும் கேரளா மட்டும் இன்றி இந்தியா முழுவதும் வைரலானது. மோகன்லால் படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுக்கு அப்பெண்கள் நடனம் ஆடிய பிறகு, பலர் அப்பாடலுக்கு நடனம் ஆடி அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வந்தனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவிலும் ஒரு “ஜிமிக்கி கம்மல்...” பாடல் உருவாகியுள்ளது. இதில் ஜோதிகா நடனம் ஆடியிருக்கிறார்.
இந்தியில் வெற்றிப் பெற்ற ‘துமாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் ‘காற்றின் மொழி’ திரைப்படம் மூலம் ஜோதிகாவும், இயக்குநர் ராதா மோகனும் ‘மொழி’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தில் “ஜிமிக்கி கம்மல்...” பாடலுக்கு ஜோதிகா நடனம் ஆடியிருக்கிறார். அவர் மட்டும் அல்ல, லக்ஷ்மி மஞ்சு, குமரவேல், சிந்து ஷ்யாம், ஆர்.ஜே சாண்ட்ரா ஆகியோரும் ஜோதிகாவுன் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார்கள். இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது.
தனஞ்செயன் தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், லக்ஷ்மி மஞ்சு, குமரவேல் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.