Jun 04, 2019 12:51 PM
ஜூன் 23 ஆம் தேதி தமிழ் சினிமாவுக்கு விடுமுறை!

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 2019-2022 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் அனைத்து நடிகர்களும் கலந்துக்கொண்டு வாக்களிக்க வசதியாக அன்றைய தினம், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நடிகர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பா வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கம் தேர்தல், 23.06.2019 ஞாயிற்று கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் , சத்யா ஸ்டூடியோ (டாக்டர் MGR ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.