Oct 12, 2019 06:46 PM

3 மணி நேரத்தில் அஜித்தை ஓரம் கட்டிய விஜய்!

3 மணி நேரத்தில் அஜித்தை ஓரம் கட்டிய விஜய்!

விஜயின் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்ததில் இருந்தே விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

 

அதேபோல், இன்று மாலை 6 மணி வெளியான ‘பிகில்’ டிரைலர் விஜய் ரசிகர்களிடம் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.

 

டிரைலரில் இடம்பெற்றிருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், விஜய் கால்பந்து விளையாடும் காட்சிகள், வசன உச்சரிப்பு என அனைத்துமே செம மாஸாக இருக்கிறது.

 

தற்போது வரை 3.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் பிகில் டிரைலர், 15 நிமிடங்களிலேயே 5 லட்சம் லைக்குகள் பெற்றது. தற்போது மூன்று மணி நேரத்தில் 13,85,000 லைக்குகளை குவித்துள்ளது. இது அஜித்தின் விஸ்வாசம் பட டிரைலர் மொத்தம் பெற்றுள்ள லைக்குகளை விட அதிகம்.

 

இதன் மூலம் மூன்று மணி நேரத்தில் புதிய சாதனை நிகழ்த்தி விஜய், அஜித்தை ஓரம் கட்டியுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.