Mar 07, 2019 06:28 AM

கார்த்தி படத்தில் ஜோதிகா!

கார்த்தி படத்தில் ஜோதிகா!

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் ஜோதிகா, தனது கணவர் சூர்யாவின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

 

இந்த நிலையில், தனது கணவரின் தம்பியான நடிகர் கார்த்தி படத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார். 

 

இதில், ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.