Sep 08, 2019 07:49 AM

5 மில்லியனை தாண்டி முதலிடத்தை பிடித்த ‘காப்பான்’!

5 மில்லியனை தாண்டி முதலிடத்தை பிடித்த ‘காப்பான்’!

கே.வி.ஆனந்த் நடிப்பில் சூர்யா நடித்திருக்கும் ’காப்பான்’ படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருக்க, அவரது மனைவி சாயீஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். மோகன்லால் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

தீவிரவாதத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலர் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பி, ஹரிஷ் ஜெயராஜ் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காட்சிகளும், இசையும் மிரட்டலாக இருக்கிறது. அதிரடியான பல காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த டிரைலர் மூலம் படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

 

இந்த நிலையில், டிரைலர் வெளியாகி 5 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களை கடந்திருப்பதோடு, ரியல் டைம் வீவ்ஸில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறது.

 

இதோ டிரைலர்,