Jul 28, 2018 09:15 AM

’காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

’காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

வித்யா பாலன் நடிப்பில் மாபெரும் வெற்றிப் பெற்ற இந்தி படம் ‘துமாரி சூலு’ தமிழில் ‘காற்றின் மொழி’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. வித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கும் இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார்.

 

ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடிக்க, இவர்களுடன் லக்‌ஷ்மி மஞ்சு, மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், உமா பத்மநாபன், குமரவேல், மோகன் ராமன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை பாவ்ட்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடேட் மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஜி.தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

 

இயக்குநர் ராதா மோகன் - ஜோதிகா கூட்டணி ஏற்கனவே ‘மொழி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதால், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

Kaatrin Mozhi

 

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, தற்போது ரீ எண்ட்ரி ஆகி நடித்து வரும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், ‘காற்றின் மொழி’ படமும் அந்த வரிசையிலான படமாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்க்கிய ‘காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. இதனை கொண்டாடும் விதத்தில் ஜோதிகா, விதார்த், இயக்குநர் ராதா மோகன், தயாரிப்பாளர் தனஞ்ஜெயான் உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

 

kaatrin Mozhi