ஆங்கிலப் படத்தின் காப்பியான ‘கடாரம் கொண்டாம்’ பற்றி லீக்கான சீக்ரெட்!

கடந்த ஆண்டு வெளியான ‘சாமி 2’ மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் இருக்க, விரைவில் வெளியாக உள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்ப்பார்க்கிறார்கள்.
கமல் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், அபி என இரண்டு இளம் நடிகர், நடிகை நடித்திருக்க, விக்ரம் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ஆங்கில பட பாணியில் படமாக்கப்பட்டிருப்பதாகவு கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘கடாரம் கொண்டான்’ ஆங்கிலப் படம் ஒன்றில் காப்பி தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘Point Blank’ என்ற ஆங்கிலப் படத்தின் ஜெராக்ஸ் தான் இந்த ‘கடராம் கொண்டான்’ என்று கூறப்படுகிறது. ஆனால், அப்படத்தின் உரிமையை பெற்று படமாக்கியிருக்கிறார்களா, அல்லது அவர்களுக்கு தெரியாமல் உருவி இந்த படத்தை எடுத்திருக்கிறார்களா, என்பது படம் ரிலீஸான பிறகு தான் தெரியும்.
விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.