ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் ‘காதல் முன்னேற்ற கழகம்’!

ப்ரித்வி பாண்டியராஜன், சாந்தினி ஜோடி போட்டிருக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் மலர்கொடி முருகன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், நாதஸ்வரம் முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.
மாணிக்க சத்யா என்பவர் கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படம், 1985 களின் நடக்கின்ற கதையாகும். ஹீரோ ப்ரித்வி பாண்டியராஜன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகராம். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் வைத்துக்கொண்டு, வேலைக்கு போகாமல் அலைந்துக்கொண்டிருப்பவராம். சாந்தினி டீச்சராக வருகிறாராம். இவர்களுக்கு இடையே ஏற்படும் காதலுடன், நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகத்தின் கொடூரத்தையும் இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்களாம்.
இப்படம் வரும் ஜூலை 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.