Jul 31, 2018 08:35 PM

மூன்று நடிகர்களை ஒன்று சேர்த்து தாணு தயாரிக்கும் புதுப்படம்!

மூன்று நடிகர்களை ஒன்று சேர்த்து தாணு தயாரிக்கும் புதுப்படம்!

’ஸ்கெட்ச்’ படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் புதிய படத்தில் மூன்று முக்கிய நடிகர்கள் இணைந்திருக்கிறார்கள்.

 

ஆம், விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘60 வயது மாநிறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்துஜா ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் மோகன்ராம், அருள் ஜோதி, பாரத் ரெட்டி, குமரவேல், ஷரத், மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பா.விஜய், பழனி பாரதி, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுத, விஜி வசனம் எழுதுகிறார். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜெய் எடிட்டிங் செய்கிறார். கதிர் கலையை நிர்மாணிக்கிறார்.

 

அப்பா - மகன் இடையிலான உறவை சொல்லும் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கும் ராதாமோகன், தற்போது பின்னணி வேலைகளில் ஈடுபட உள்ளாராம். 

 

சத்தமே இல்லாமல் இப்படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்திருக்கும் படக்குழு, படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

 

60 Vayadu Maaniram