Jun 04, 2019 02:14 PM

’களவாணி 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’களவாணி 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விமல், ஓவியா நடிப்பில், சற்குணம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘கலைவாணி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘கலைவாணி 2’ பல பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

’கலைவாணி’ யை போல எதார்த்தமான குடும்ப மற்றும் காதல் படமாக மட்டும் இன்றி சமகால அரசியல் பற்றி காட்டமாக பேசியிருக்கும் ‘களவாணி 2’ பலவிதமான அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

அதிலும், அரசியல் வில்லனாக அறிமுகமாக உள்ள பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் கதாபாத்திரமும், அதை அவர் கையாண்ட விதமும் படத்திற்கு பிளஸாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

 

Public Star Durai Sudhakar in Kalavani 2

 

ஆர்.ஜே.விக்னேஷ், கஞ்சா கருப்பு என்று படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் இருப்பதோடு, படம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசப்பட்டிருக்கிறதாம். 

 

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டி படங்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், சற்குணத்தில் எழுத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் படமான ‘களவாணி 2’ உள்ளாட்சி தேர்தலை வைத்து, தமிழகத்தில் சமகால அரசியலையும், திடீரென்று உருவான அரசியல் தலைவர்கள் பற்றியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்க கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இப்படி பல விதத்தில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘களவாணி 2’ வரும் ஜூன் 28 ஆம் தேதி வெளியாகிறது.

 

Kalavani 2 Release Poster