Mar 28, 2020 09:46 AM

நடிகை கெளதமியால் கமலுக்கு மீண்டும் சிக்கல்!

நடிகை கெளதமியால் கமலுக்கு மீண்டும் சிக்கல்!

கமல்ஹாசனும், நடிகை கெளதமியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சுமார் 10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், திடீரென்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது அனைவரும் அறிந்தது தான். கமல்ஹாசனிடம் இருந்து தான் ஏன் பிரிந்தேன்? என்பதற்கு பத்திரிகையாளர்களிடம் கெளதமி விளக்கம் அளித்தால். அதில், தனது மகளின் எதிர்காலத்திற்காகவே பிரிந்தேன், என்றும் தெரிவித்தார்.

 

ஆனால், இது தொடர்பாக கமல் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதையடுத்து இருவரும் அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

 

இந்த நிலையில், கெளதமி மூலம் கமல் புதிய சிக்கல் ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது, கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களின் வீடுகளில் மாந்கராட்சி கொரோனா எச்சரிக்கை ஸ்டிக்கர் ஓட்டி வருகிறது. அதில், அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில், தேனாம்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் இந்த கொரோனா எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால், கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளித்த கமல்ஹாசன், மாநகராட்சி ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் வீட்டில் நன வசிக்கவில்லை. எனது கட்சி அலுவலகம் தான் இருக்கிறது. இது தவறுதலாக நடந்த ஒன்றாகும். மக்கள் மீது கொண்ட அக்கறையால் நான் கடந்த இரண்டு வாரங்களாக, என்னை தனிமைப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன், என்றார்.

 

இதற்கிடையே, கமல்ஹாசன் வீட்டில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டியது குறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி தரப்பு, வெளிநாடு சென்றுவிட்டு திரும்புகிறவர்கள் வீட்டில் கொரோனா எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும், என்பது அரசின் நடைமுறையாகும். அதன்படி, நடிகை கெளதமி சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். அதனால், அவரது இல்லத்தில் கொரோனா எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அவரது பாஸ்போர்ட்டில் கமல்ஹாசனின் அலுவலக முகவரி இருந்ததால், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். அதன் பிறகு தான், கெளதமி அங்கு வசிக்கவில்லை, என்பது தெரிய வந்தது.

 

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் அலுவலகத்தில் ஒட்டப்பட்ட கொரோனா ஸ்டிக்கர் அகற்றப்பட்டுவிட்டது, என்று தெரிவித்துள்ளார்கள்.