பிக் பாஸில் இருந்து கமல்ஹாசன் விலகல்! - எதற்காக தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 பெரும் பரபரப்பான நிலையில் உள்ளது. போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் வாய் சண்டையை கடந்து தற்போது கை கலப்பும் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் இருந்து கமல்ஹாசன் விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது இந்த விலகல் தற்காலிகமானது தான். காரணம், ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கமல் விரைவில் கலந்து கொள்ள போகிறார். அதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சுமார் 10 நாட்களுக்கு ஓய்வு கொடுக்கப் போகிறாராம்.
தற்போது சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
கமல்ஹாசன் பங்கேற்கும் காட்சிகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் இருந்து படமாக்கப்பட உள்ளது. இதனால், 25 ஆம் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இணையும் கமல், செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ‘இந்தியன் 2’ வுக்கு தேதி கொடுத்திருக்கிறாராம். அதன் பிறகு, மீண்டும் பிக் பாஸ் குழுவுடன் இணைபவர், அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்ட, ‘இந்தியன் 2’ படக்குழுவுடன் முழுவதுமாக இணைவார் என்றும் கூறப்படுகிறது.