Jul 23, 2018 02:03 PM

’இந்தியன் 2’ குறித்து கமல் வெளியிட்ட அறிவிப்பு!

’இந்தியன் 2’ குறித்து கமல் வெளியிட்ட அறிவிப்பு!

பிக் பாஸ் சீசன் 2 மற்றும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சி பணிகள் என்று பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி தனது ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடுகிறார். இதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார்.

 

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிப்பதும், அவருக்கு நயந்தாரா ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதும் உறுதியானாலும் இதுவரை படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் ‘இந்தியன் 2’ படம் பற்றிய அறிவிப்பு ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

 

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடன்கப்படும், என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.