Aug 20, 2019 06:00 PM

பிக் பாஸுக்காக கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்? - கேட்டா ஷாக் அடிக்கும்

பிக் பாஸுக்காக கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்? - கேட்டா ஷாக் அடிக்கும்

வெளிநாட்டு சேனல்களில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற பிக் பாஸ், பாலிவுட்டில் பல வருடங்களாக சக்கைபோடு போட்டிக்கொண்டிருக்க, தற்போது தென்னிந்தியா முழுவதும் ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறது. தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மூன்றாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை, முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

 

இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க மாட்டார், என்று ஆரம்பத்தில் தகவல் கசிந்தது. அவருக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் பிக் பாஸாக களம் இறங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், கமல்ஹாசன் எப்போதும் போல, பிக் பாஸாக களம் இறங்கிவிட்டார்.

 

இந்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 சீசனை தொகுத்து வழங்குவதற்காக, சம்மந்தப்பட்ட டிவி சேனலிடம் கமல்ஹாசன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, முதல் இரண்டு சீசன்களிலும் கமல்ஹாசனுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போதைய மூன்றாவது சீசனை பொருத்தவரை அவருக்கு சம்பளம் இல்லையாம். நிகழ்ச்சி தயாரிப்பில் அவரும் ஒரு பங்குதாரராம். அதாவது, பாதிக்கு பாதி என்ற அக்ரிமெண்ட் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

முதல் இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசன்களுக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்திருப்பதோடு, பல கோடிகளை முதலீடு செய்திருக்கிறதாம். அதனால், இந்த முறை சம்பளம் வாங்காமல், நிகழ்ச்சியில் பங்கு தாரராக கமல் மாறிவிட்டார், என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது.

 

இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால், இது குறித்து பிக் பாஸ் ஏரியாவில் பேச்சு அடிபடுகிறது.