Feb 16, 2019 08:02 AM

காதல் கலந்த குடும்ப படமாக உருவாகும் ‘கண்களை மூடாதே’

காதல் கலந்த குடும்ப படமாக உருவாகும் ‘கண்களை மூடாதே’

செயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.இ.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிக்கும் படம் ‘கண்களை மூடாதே’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, இசையமைத்து, தயாரித்திருக்கும் கே.இ.எட்வர்ட் ஜார், நாயகனாகவும் அறிமுகமாகிறார். நாயகியாக சித்ராய் நடித்திருக்கிறார். இவர்களுடன் போண்டா மணி, பயில்வான் ரங்கநாதன், கிங்காங், சின்ன தம்பி, மார்த்தாண்டம் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

திஷாத் சாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமிழ்மணி சங்கர் எடிட்டிங் செய்கிறார். அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன் ஆகியோர் துணை இயக்குநர்களாக பணியாற்றுகிறார்கள்.

 

படம் பற்றி இயக்குநர் கூறுகையில், “முற்றிலும் வித்தியாசமான காதல் கலந்த குடும்பகதை தான் இந்த படம். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும், நம் பாரம்பரியம் என்ன என்பதை உணர்த்தும் கதை.

 

படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் நமக்கு இது போல மனைவி கிடைக்காதா என்று மனதில் தோன்றும். அதே மாதிரி எல்லா பெண்களுக்கும் தங்களுக்கு  இதுபோல் கணவன் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஏங்குவார்கள் அப்படியான திரைக்கதை இது.

 

படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. படம் பிப்ரவரி  28ம் தேதி வெளியாகிறது.” என்றார்.