கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் படத்தின் லேட்டஸ் அப்டேட்!

தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருக் கார்த்தி, மற்றொரு புதுமையான கதாபாத்திரத்தில் ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் கார்த்தியின் 19 வது படமாக உருவாகி வருகிறது.
‘மாநகரம்’ புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், கார்த்தியின் புதுப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு திண்டுக்கல்லில் சமீபத்தில் தொடங்கியது. தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற உள்ளது.
தெலுங்குப் படம் ‘கீதா கோவிந்தம்’ மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா மந்தனா, இப்படத்தின் மூலம் நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மற்றும் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
விவேக் மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஜெய்சந்திரன் கலையை நிர்மாணிக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படம், மக்களை வெகுவாக கவர்ந்த கார்த்தியின் மற்றப் படங்களைப் போலவே ரசிகர்களை கவரும் விதத்தில் உருவாகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.