Aug 17, 2019 04:20 AM
கார்த்தியின் புது படத்தின் சீக்ரெட் வெளியானது!

’தேவ்’ படத்தை தொடர்ந்து ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, தற்போது ’ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தெலுங்குப் படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் கதாநாயகி ராஷ்மிகா, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில், கார்த்தியின் புது படத்தின் தலைப்பு ‘சுல்தான்’ என்பதை தெரிவித்திருக்கிறார்.
படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாக ராஷ்மிகா படத்தின் தலைப்பை வெளியிட்டிருப்பது தயாரிப்பு தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.