Jan 28, 2019 09:18 AM

கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப் படம்! - ஹீரோ இவர் தான்

கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப் படம்! - ஹீரோ இவர் தான்

ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. விமர்ச ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் கார்த்திக் சுப்புராஜ் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் வேறு ஒரு ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.

 

ஆம், கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த பிறகு, கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருக்கிறாராம். அந்த கேப்பில், ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அதில் தனுஷை நடிக்க வைக்கப் போகிறாராம்.

 

Dhanush

 

சென்னையில் உள்ள திரையரங்கத்தில் நடைபெற்ற ‘பேட்ட’ வெற்றி விழா நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த தகவலை கூறினார்.