பின்வாங்கிய கஸ்தூரி! - அப்செட்டில் பிக் பாஸ் குழு

60 நாட்களை கடந்திருக்கும் பிக் பாஸ் சீசன் 3-யில் நேற்று கஸ்தூரி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் சேரன், கஸ்தூரி, சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்களின் குறைவான வாக்குகளை பெற்றதால் கஸ்தூரி வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், உண்மையில் கஸ்தூரியை எலிமினேட் செய்ய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விரும்பவில்லையாம். காரணம், பிக் பாஸில் கஸ்தூரி பங்கேற்க அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. சமீபகாலமாக சர்ச்சையாக பேசி வந்த கஸ்தூரியால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கும் என்று எண்ணி தான் அவரை போட்டியாளராக பங்கேற்க வைத்தார்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி வந்ததும், அவரால் சக போட்டியாளர்களுடன் போட்டி போட முடியவில்லையாம். குறிப்பான வனிதா அளவுக்கு கூட கஸ்தூரியால் கண்டெண்ட் கொடுக்க முடியவில்லையாம்.
மேலும், கஸ்தூரியின் அனைத்து நடவடிக்கைகளையும் சக போட்டியாளர்கள் உதாசினப்படுத்துவதோடு, ரசிகர்களும் அவர் மீது பெரிதாக விருப்பம் காட்டாததால் கஸ்தூரியே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்.
ரசிகர்களிடம் குறைவான வாக்குகள் பெற்றாலும், அவரை வெளியேற்றாமல் சீக்ரெட் ரூமில் வைக்க பிக் பாஸ் குழு முடிவு செய்ததாம், ஆனால், தனதுக்கு சீக்ரெட் ரூம் வேண்டாம் என்று மறுத்திருக்கும் கஸ்தூரி மூட்டை முடியச்சோடு நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறத். இது உண்மையா? என்பது இன்றைய எப்பிசோட்டில் தெரிந்து விடும்.
அதே சமயம், கஸ்தூரி மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், அவர் இப்படி பாதியிலே பயந்து விலகியிருப்பதால் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறார்களாம். மேலும், எஞ்சி இருக்கும் 40 நாட்களில் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட புதிய போட்டியாளரை களம் இறக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.