Sep 19, 2019 07:14 AM

லொஸ்லியாவில் வெடித்த பிரச்சினை! - கவின், சாண்டி இடையே ஏற்பட்ட மோதல்

லொஸ்லியாவில் வெடித்த பிரச்சினை! - கவின், சாண்டி இடையே ஏற்பட்ட மோதல்

பிக் பாஸ் வீட்டில் தற்போது டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக செயல்படுபவர்களில் ஒருவரை நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட இருப்பதால், போட்டியாளர்களிடம் கடுமையாக மோதி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், 87 வது நாளான இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில், லொஸ்லியாவை சாண்டி தள்ளிவிட, அவர் தடுமாறி கீழே விழுகிறார். இதைப்பார்த்து சாண்டி மீது கவின் கோபப்படுகிறார்.

 

அதற்கு சாண்டி, மன்னிப்பு கேட்பதடோடு, தெரியாமல் நடந்துவிட்டது, என்று கூறுகிறார். ஆனால், அதை ஏற்க மறுக்கும் கவின், நான் தான் பார்த்துக்கொண்டு இருக்கேனே, நீ வேணும் என்று தான் தள்ளிவிட்ட” என்று கூறுகிறார்.

 

உடனே சாண்டி, ரொம்ப பண்ணாதடா, வேணும் என்று யாராவது செய்வார்களா? புரிஞ்சிக்க, என்று கூற, அதற்கு கவின், யார் ரொம்ப பண்ணுவது, என்று மீண்டும் சாண்டி மீது கோபப்படுகிறார்.

 

மொத்தத்தில், வனிதா இருந்த போது வெடித்த பிரச்சினை தற்போது கவின் ரூபத்தில் வெடிக்க இருப்பது நன்றாக புரிகிறது.

 

Sandy and Loslya