Sep 29, 2019 07:23 AM

பிக் பாஸ் பணம் மூலம் அம்மாவை ஜானிமினில் எடுத்த கவின்!

பிக் பாஸ் பணம் மூலம் அம்மாவை ஜானிமினில் எடுத்த கவின்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான கவின், டைடிலை வெற்றிப் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5 லட்சத்திற்காக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

 

அவர் ஏன் அப்படி செய்தார்? என்பது பெரிய கேள்வியாக இருந்த நிலையில், சிறையில் இருக்கும் தனது அம்மாவுக்காகவே கவின் ரூ.5 லட்சத்தை பெற்ற உண்மை தெரிய வந்துள்ளது.

 

மாதச் சீட்டி நடத்தி அதில் மோசடி செய்ததாக கவினின் அம்மா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த போதே கவின், இரவோடு இரவாக சென்று தனது அம்மாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. அதுமட்டும் இன்றி, அவரது அம்மா மோசடி செய்த தொகையான ரூ.28 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலேயே கவின், பிக் பாஸில் தொடர்ந்து நீடித்தார்.

 

அவர் சுமார் 90 நாட்களுக்கு மேல் பிக் பாஸி இருந்த நிலையில், ஒரு நாளுக்கு ரூ.360 ஆயிரம் என்று சுமார் அவருக்கு 28 லட்சம் ரூபாய் கிடைத்தது. இதற்கிடையே, கூடுதலாக ரூ.5 லட்சம் கிடைத்தது. அதே சமயம், எஞ்சியிருக்கும் 5 நாட்கள் போட்டியில் நீடித்தால் ரூ.1.5 லட்சம் மட்டுமே கிடைக்கும். ஆனால், தற்போதே பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பினால் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பததோடு, தனது அம்மாவை உடனடியாக ஜாமீனில் எடுக்க இந்த பணம் தேவைப்படும் என்பதாலும் கவின், 5 லட்சத்தோடு கிளம்பியிருக்கிறார்.

 

அவர், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறதும், தனது அம்மாவை ஜாமீனில் எடுத்ததோடு, சீட்டு பிடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.28 லட்சத்தையும் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

மொத்தத்தில், தனது அம்மாவை காப்பாற்றவே கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.