Mar 04, 2020 10:14 AM

சோகத்தில் பிக் பாஸ் கவின்! - காரணம் இது தான்

சோகத்தில் பிக் பாஸ் கவின்! - காரணம் இது தான்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியிருக்கும் கவின், ஏற்கனவே திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததோடு, ‘சரவணன் மீனாட்சி’ சிரியலில் வேட்டையன் என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வந்த கவின், தற்போது மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

கவினுக்கு பிக் பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்திருப்பதோடு, கவின் ஆர்மி என்ற பெயரில் பல சமூக வலைதள குரூப்புகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் கவினை பற்றி அவ்வபோது பல தகவல்கள் வைரலாகி வருகிறது.

 

இந்த நிலையில், கவினின் ரசிகரான கமல் என்றவர் உயிரிழந்துவிட்டதாக ட்விட்டரில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்த மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கும் கவின், ”வாழ்க்கையில் நமக்கான நேரம் எப்போதும் வரும் என்பதை நாம் கணிக்க முடியாது. எனவே எப்போதும் உங்கள் அருகிலிருப்பவர்களையும், அன்புக்குரியவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். கமலின் ஆத்மா சாந்தியடைட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

கவினின் இந்த இரங்கல் செய்திக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் அவரது ரசிகர்கள், இது போதும், கமலின் ஆத்மா சாந்தியடைந்துவிடும், என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.