Aug 09, 2019 06:29 PM

66வது தேசிய விருது அறிவிப்பு! - சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு

66வது தேசிய விருது அறிவிப்பு! - சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு

66 வது திரைப்பட தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சுரேஷ், வென்றுள்ளார்.

 

சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது ‘பாரம்’ (Baaram) படத்திற்கும், சிறந்த மலையாளப் படத்திற்கான விருது சுதனி ஃபிரம் நைஜீரியா’ (SudaniFromNigeria) படத்திற்கும், சிறந்த இந்திப் படத்திற்கான விருது ‘அந்ததுன்’(Andhadhun) படத்திற்கும், சிறந்த தெலுங்குப் படத்திற்கான விருது ‘மகாநடி’ (Mahanati) படத்திற்கும் கிடைத்திருக்கிறது.

 

சிறந்த நடிகைக்கான விருது ‘மகாநடி’ படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ’பத்மாவத்’ படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த சண்டைக்காட்சிகளுக்காக ‘கே.ஜி.எப்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

சிறந்த நடிகருக்கான விருது ஆயுஷ் மாங் மற்றும் விக்கி கெளஷல் ஆகியோருக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எம்.ஜே.ராதாகிருஷ்ணனுக்கு ‘ஓலு’ படத்திற்காக கிடைத்திருக்கிறது.