May 28, 2019 02:48 PM

பாலிவுட் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்! - மும்பையில் செட்டிலாகிறார்

பாலிவுட் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்! - மும்பையில் செட்டிலாகிறார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பலர் பாலிவுட்டில் வெற்றி நாயகிகளாக வலம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட்டுக்கு சென்ற அசின், ஒரு சில வெற்றிகளை கொடுத்தாலும், பிறகு தொடர் தோல்விகளால் வாய்ப்பின்றி இருந்தவர், மும்பை தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாகிவிட்டார்.

 

அவர் வழியில், பாலிவுட்டுக்கு போன திரிஷா, ஸ்ரேயா ஆகியோருக்கும் பாலிவுட் கைகொடுக்கவில்லை.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருக்கும் கீர்த்தி சுரேஷும், பாலிவுட் சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

 

’ரஜினி முருகன்’ படத்தின் மூலம் பிரபலமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த நிலையில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படமான ’நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

 

தற்போது இந்தியில் அஜய் தேவுகனுக்கு ஜோடியாக நடித்து வருபவர், தமிழ்ப் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, பாலிவுட் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக மும்பையிலேயே தங்குவதற்காக அங்கே சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கிவிட்டாராம்.