Feb 27, 2019 09:37 AM

’கென்னடி கிளப்’ படத்தில் நடிக்கும் கபடி வீராங்கனைகள் முதலமைச்சர் கோப்பையை வென்றனர்!

’கென்னடி கிளப்’ படத்தில் நடிக்கும் கபடி வீராங்கனைகள் முதலமைச்சர் கோப்பையை வென்றனர்!

கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த சுசீந்திரன், தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து ‘கென்னடி கிளப்’ என்ற பெயரில் படம் எடுத்து வருகிறார். இதில் சசிகுமார் மற்றும் பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் படப்பிடிப்பை நடத்திய ‘கென்னடி கிளப்’, தமிழகத்தின் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினார்கள். மேலும், இயக்குநர் சுசீந்திரனின் சொந்த ஊரான பழனிக்கு அருகில் உள்ள கணக்கம்பட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விழுப்புரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

இப்படத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த கபடி குழுவான வெண்ணிலா கபடி குழுவில் இருந்து 7 நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்து வருகிறார்கள். இவர்கள் பெரிதாக கருதுவது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை தான்.இந்த கோப்பையின் மதிப்பு ரூ.12 லட்சமாகும்

 

ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் வாரியாக நடைபெற்று இறுதிப் போட்டியில் வெல்லும் அணியிருனருக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ வழங்கப்படும்.

 

இந்த ஆண்டுகான இறுதிப் போட்டி திருச்செங்கோட்டில் நடைப்பெற்றது. இதில் விளையாடிய ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்த வீராங்கனைகள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

 

Kabadi Team

 

இவர்களின் வெற்றி இவர்களுக்கு மட்டும் அல்லாமல் படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.