May 14, 2019 05:19 AM

விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

விஜய் ஆண்டனி, அர்ஜுன் ஆகியோரது நடிப்பில் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘கொலைகாரன்’ டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் ஆண்டனியின் படங்கள் வித்தியாசமானதாக இருப்பதாலும், கூடுதலாக அர்ஜுன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

 

இதற்கிடையே, ரம்ஜான் பண்டிகையான ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘கொலைகாரன்’ வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், சமீபத்தில் ‘கொலைகாரன்’ படத்தை பார்த்த சென்சார் குழு அதிகாரிகள் படத்தை வெகுவாக பாராட்டியதோடு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

 

Kolaigaran

 

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரித்திருக்கும் இப்படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார்.