Oct 18, 2019 05:34 AM

’பிகில்’ படத்திற்காக அட்லீ வாங்கும் சம்பளம்! - அதிர்ச்சியில் கோலிவுட்

’பிகில்’ படத்திற்காக அட்லீ வாங்கும் சம்பளம்! - அதிர்ச்சியில் கோலிவுட்

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘பிகில்’ என்று விஜயை வைத்து மூன்று படங்கள் இயக்கியிருக்கிறார். 

 

இயக்குநர் அட்லீ மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தாளும் விஜய் போன்ற டாப் ஹீரோக்கள் அவர் படத்தில் தொடர்ந்து நடிப்பதால், அட்லீயின் மவுசுக்கு எந்தவித குறைபாடும் ஏற்படவில்லை என்பதை, அவர் ‘பிகில்’ படத்திற்கு வாங்கிய சம்பளமே நீருபித்திருக்கிறது.

 

ஆம், ‘பிகில்’ படத்திற்காக அட்லீ ரூ.25 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ஷாருக்கானை வைத்து இயக்கப் போகும் படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

‘மெர்சல்’ படத்திற்கு ரூ.17 கோடி சம்பளம் வாங்கிய அட்லீயின் சம்பளம் தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே போவதைப் பார்த்து சில கோலிவுட் இயக்குநர்களே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.