Apr 21, 2021 07:51 AM

விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய ’கும்பாரி’ படக்குழு

விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய ’கும்பாரி’ படக்குழு

நடிகர் விவேக் கடந்த 17 ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்தார். அவருடைய இறப்பு திரையுலகை மட்டும் இன்றி பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவையொட்டி, அவர் முன்னெடுத்த ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தற்போது பல சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

மேலும், நடிகர் விவேக்கின் மறைவுக்கு படப்பிடிப்பு தளங்களிலும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ’கும்பாரி’ திரைப்பட குழுவினர் தங்களது படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விவேக்கிற்கு தீபம் ஏற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

 

குமார் தாஸ்  தயாரிப்பில் அபி சரவணன், மஹானா மற்றும் சாம்ஸ்  நடிப்பில் இயக்குந கெவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’கும்பாரி’. இப்படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘கும்பாரி’ படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் நாயகன் அபி சரவணன், நாயகி மஹானா, இயக்குநர் கெவின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.