”முதுகில் குத்திட்டாங்க...” - குஷ்பு ஆதங்கம்

நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களை மரியாதை குறைவாக பேசும் ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் குஷ்பு, அச்சங்கத்தின் வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்ட ஆடியோ லீக்காகி, வைரலாகி அவர்க்கு பெரிய பிரச்சினையாகிவிட்டது.
பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், குஷ்பு தனது பேச்சுக்கு ட்விட்டர் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தனது ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. நான் பேசிய முழுமையான ஆடியோ அது இல்லை, என்று தெரிவித்தவர், அந்த ஆடியோவை யார் வெளியிட்டார்கள் என்பது எனக்கு தெரியும், ஆனால், அவர்களின் பெயரை நான் வெளியே சொல்ல மாட்டேன்.
இங்கு யாருக்காக உழைக்கிறீர்களோ, அவர்களே உங்கள் முதுகில் குத்த தயாராகிறார்கள். எனது ஆடியோவை வெளியிட்டவர்களுக்கு, எனது மன்னிப்பே சரியான தண்டனையாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவால், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் அவர் உடன் இருந்தே அவர் முதுகில் குத்திட்டாங்க போல.
குஷ்பு பேசிய ஆடியோ இதோ,