Aug 06, 2019 06:17 PM

கமல் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய குஷ்பு!

கமல் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய குஷ்பு!

1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து மொழி முன்னணி ஹீரோக்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்கள் வரை, கிட்ட தட்ட அனைத்து நடிகர்களுடம் ஜோடி போட்ட நடிகை என்றும் சொல்லலாம்.

 

சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த குஷ்பு, தற்போதும் திரைப்படங்களில் நடிப்பதோடு, திரைப்படங்கள், டிவி சீரியல்கள் தயாரிப்பது மட்டும் இன்றி, காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொருப்பும் வகிக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகை குஷ்பு, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டே நடித்ததாக கமல் கூறியுள்ளார். மேலும், அப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தாலும், தனக்கு குஷ்புவை தான் அதிகம் பிடித்திருந்தது, என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

Kamal

 

பிக் பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசனின் கேட்ட கேள்வியின் போது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.